'காற்றின் மொழி' படத்தில் ஜோதிகாவிற்கு கணவராக நடித்திருக்கும் வித்தார், இந்த படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

இந்த படத்தில் இதுவரை தான் நடிக்காத கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், முக்கியமாக ஆழகான, அன்பான கணவராக நடித்துள்ளதாகவும் இதன் மூலம் விதார்த் நல்லா நடிப்பார் என்கிற ஒரு அடையாளம் தனக்கு கிடைக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

பின் ஜோதிகாவை பற்றி பேசும் போது, முதலில் இந்த படத்தில் ஜோதிக்காவுடன் நடிக்க தயங்கியதாகவும், அனால் அவர் பெரிய நடிகையாக இருந்தும் அனைவரிடமும் மிகவும் கேஷுவலாக மற்ற நடிகர்களிடம் பழகியதை பார்க்கும் போது அவர் சிறந்த நடிகை என்பதையும் தாண்டி நல்ல மனுஷியாக தனக்கு தெரிந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஜோதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் போன் பேசி தான் பார்த்ததே இல்லை என்றும், அழும் காட்சிகளில் அவர் கிளிசரின் போடாமல் நடித்து தன்னை ஆச்சர்யப்படுதியதாகவும் கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக ஊர் சுத்துற பையனாக தான் நடிக்க்பதாக்கவும், ஆனால், உள்ளே வேறு ஒரு பரிமாணத்தில் என் கதாப்பாத்திரம் டிசைன் பண்ணியிருக்கும் என்றும் அதே போல் இந்த படத்தில் ஒரு ஊரே சிறந்து நடிச்ச மாதிரி இருக்கும், அவ்வளவு நடிகர்கள் இருக்காங்க. இந்த படம் தனக்கு மற்றும் இன்றி பலரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என கூறியுள்ளார் விதார்த்.