actor vithaarth baby birth
2001 யில், மாதவன் நடித்து சூப்பர் ஹிட் ஆன 'மின்னலே ' படத்தின் மூலம், துணை நடிகராக அறிமுகம் கொடுத்தவர் நடிகர் விதார்த். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் துணைநடிகராக நடித்தார்.
பத்து வருட போராட்டத்திற்கு பின் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தின் மூலம், கதாநாயகனாக அடையாளம் காணப்பட்டு தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ஒரு கிடாரியின் கருணை மனு, குற்றமே தண்டனை போன்ற படங்கள் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் 2015 ஜூன் மாதம் காயத்திரி தேவி என்கிற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இப்போது இவருக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் விதார்த் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகிறார். இந்த செய்தியை அறிந்த பலர் விதார்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்திலும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிற்னர்.
