தமிழ் சினிமாவில், நடிகர் என்பதை தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் தடம் பதித்துள்ளார் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான, சிலுகுவார் பட்டி சிங்கம், மற்றும் ராட்சசன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வருடம், திடீர் என படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் கை முறிவு மற்றும் கழுத்தில் பலமான அடி பட்டது, இதன் காரணமாக நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்த விஷ்ணு விஷால், உடல் நலம் தேறி மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், ஜெகஜால கில்லாடி மற்றும் FIR ஆகிய படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க விஷ்ணு விஷால், சிகரெட் பிடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, "புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு'... இந்த வருத்தத்தோடு உங்களுடைய கடைசி சிகரெட்டை புகைத்து விடுங்கள். 2020 ஆம் ஆண்டை, மிகவும் ஆரோக்கியமாக தொடங்குங்கள் நான் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவன் என்று". என பதிவிட்டுள்ளார்.

விஷ்ணு விஷாலின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.