Asianet News TamilAsianet News Tamil

விஜய்யின் அரசியல் எண்ட்ரி முதல் ஜேசன் சஞ்சய்யின் சினிமா எண்ட்ரி வரை... நடிகர் விஷால் அளித்த பளீச் பேட்டி

முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஷால், தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

Actor Vishal speaks about vijay political entry and Jason sanjay cinema entry gan
Author
First Published Aug 29, 2023, 11:03 AM IST

இன்று 46வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஷால் இதையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோம் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார். முதியோர் இல்லம் வந்த நடிகர் விஷாலை வரவேற்ற கன்னியாஸ்திரிகள் மற்றும் காப்பகத்தில் இருந்த உறவினர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடுவது கடவுளிடம் நேரில் வாழ்த்து பெறுகிறது போல் உள்ளது. 

உதயநிதியின் அரசியல் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு குறித்து மக்கள்தான் கூற வேண்டும். உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வருவது குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என கூறினார்.

இதையடுத்து சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை குறித்து பேசிய அவர், சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்துக்கு 45 வருடத்துக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டம். 45 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக உள்ளார். இந்த வயதிலும் அவர் நடிப்பது எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர் ஓய்வெடுக்கலாம், ஆனால் மக்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என நினைப்பதுதான் சூப்பர் ஸ்டாருக்கான அர்த்தம் என தெரிவித்தார்.

பின்னர் நடிகர் சங்க கட்டிடம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், நடிகர் சங்க தேர்தல் கோரிக்கைகளில் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றிவிட்டோம். கடைசி கோரிக்கையான நடிகர் சங்க கட்டடத்தை கட்டிமுடிப்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகதான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு முக்கியத்துவமான பெருமையான கட்டடமாக, கலாச்சார மையாமாக இருக்க வேண்டும் என்பதால்தான் தாமதமாகிறது. எம்ஜிஆர், கலைஞர் சமாதி போன்று மக்கள் பார்க்க வரவேண்டும் என நினைக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கூறினார்.

இதையும் படியுங்கள்... நிக்கி முதல் மஞ்சிமா வரை.. ஓணம் பண்டிகையை வண்ணமயமாக்கிய நாயகிகள் - கிறங்கிப்போய் நிற்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது புறக்கணிப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த விஷால், தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4 பேர் அமர்ந்து ஒருவருக்கு அளிக்கலாம், வேண்டாம் என தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு விருது அளிப்பது ரசிகர்கள்தான். ஒரு குழு சார்ந்த ஆலோசனைதான் தேசிய விருதுகளின் பட்டியல் என ஓப்பனாக கூறினார்.

Actor Vishal speaks about vijay political entry and Jason sanjay cinema entry gan

அதேபோல் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்த கேள்விக்கு, முதலில் விஜய் அரசியலுக்கு வரட்டும். விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.அவரை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அவருக்கு ஆரம்பகாலத்தில் கிடைத்த விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்ற தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். எனக்கு தெரிந்த ஒரே விஜய் இளைய தளபதி விஜய்தான். அவரது ரசிகன் நான் என  பெருமையாக சொல்வேன். ஒரு வேளை விஜய்க்கு அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள். வாக்காளராக அவர் நல்லது செய்ய வேண்டும் என நினைப்பதாக தெரிவித்தார்.

இறுதியாக விஜய் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி உள்ளது பற்றி விஷாலிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஜய்யின் மகனுக்கு ஜேசன் சஞ்சய் வாழ்த்துகள். நானும் 25 வருடமாக இயக்குநராக வேண்டும் என நினைத்து வருகிறேன். இயக்குநராக வேண்டும் என நினைக்கும் என்னை ஜேசன் சஞ்சய் ஊக்கப்படுத்தி உள்ளார் என விஷால் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... ரஜினியால் சீமானுக்கும் லாரன்ஸுக்கு இடையே வெடித்த சண்டை... ஒருவழியாக முடிவுக்கு வந்தது

Follow Us:
Download App:
  • android
  • ios