Asianet News TamilAsianet News Tamil

VISHAL |புனித் அனைவருக்கும் ஆசான் ; மறைந்த புனித் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஷால்!! வீடியோ உள்ளே

மறைந்த கன்னட பிரபலம் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் பிரபல நடிகர் விஷால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Actor Vishal pays homage to late actor Puneeth Rajkumar
Author
Chennai, First Published Nov 17, 2021, 6:06 PM IST

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தனர்  புனித் ராஜ்குமார். ரசிகர்களால்  பவர்ஸ்டார் என்று  செல்லமாக அழைக்கப்பட்ட புனித் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவரின் ஸ்டண்ட் போன்ற உடற்பயிற்சி வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தன. அவ்வாறு கடந்த மாதம் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த புனித்திற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 29-ம் தேதி புனித் காலமானார்.

பின்னர் நடைபெற்ற அவரது இருந்து அஞ்சலியிலும், இறுதி ஊர்வலமும் மக்கள் வெள்ளத்திற்கு நடுவே தான் நடைபெற்றது என்றே சொல்லலாம். புனித் தனது வாழ்நாள் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை இலவச கல்வி, முதியோர் இல்லம், ஏழைகளுக்கு உதவி என தனது பெரும்பகுதியை பயன்படுத்தியது அவரது மறைவுக்கு பிறகும் தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

Actor Vishal pays homage to late actor Puneeth Rajkumar

புனித ஆத்மாவாக வாழ்ந்து மறைந்த புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ் நடிகர்கள் சூர்யா,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி என பலரும் புனித் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்நிலையில் இன்று நடிகர் விஷால் புனித் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியத்தியதுடன்  அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 

Actor Vishal pays homage to late actor Puneeth Rajkumar

முன்னதாக புனித் மூலம் கல்வி பெற்று வந்த 1800 குழந்தைகளின் கல்வி செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக விஷால் அறிவித்திருந்தார். இது குறித்து புனித்துக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கூறிய விஷால் ; புனித் அனைவருக்கும் ஆசானாக இருந்துள்ளார். அவர் விட்டு சென்ற பணியை உங்கள் உதவியுடன் நான் தொடர்ந்து செய்வேன்  தெரிவித்துள்ளார்.

"

Follow Us:
Download App:
  • android
  • ios