actor vinuchakravarthy pass away
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த குணச்சித்திர நடிகர் "விணுசக்கரவர்தி" தமிழ், தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 1000 படத்திற்க்கும் மேல் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதி பட்டு வந்த இவர் 7 மணி அளவில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். இவருக்கு வயது 72 .
கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான இவர், ரஜினி, கமல் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் இறந்த செய்தியை அறிந்த பல பிரபலங்கள் சமூகவலைத்தளத்தில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
