திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், பலர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபலம் விளையாட்டு வீராங்கனை ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் விநாயக் ஜோஷி, கடந்த சில வருடங்களாக, தேசிய பேட்மிண்டன் வீராங்கனையும், சர்வதேச அளவில் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ள வர்ஷா பெலவாடி என்ற வீராங்கனையை காதலித்து வருகிறார்.

இவர்களுடைய திருமணத்திற்கு தற்போது இவர்கள் இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்துள்ளதை அடுத்து, விரைவில் இந்த காதல் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

இந்த திருமணம் குறித்து பேசியுள்ள விநாயக் ஜோஷி ‘வர்ஷாவை தனக்கு சிறுவயதில் தெரியும் என்றாலும், அவருடன்  கடந்த 25 வருடங்களாக எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது. பின் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரால் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் நண்பர்களாக பழக துவங்கி இருவருக்கும் இடையே மனம் ஒத்து போனதால் காதலிக்கவும் துவங்கினோம்.

தங்களுடைய ஆசையை பெற்றோர் ஏற்று கொண்டதால், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

வர்ஷா, பேட்மிண்டன் ரேங்கில் 120வது இடத்தில் இருக்கிறார். எனினும் தற்போது ஓய்வு பெற்று பேட்மிண்டன் பயிற்சி அளித்து வருகிறார் என விநாயக் ஜோஷி தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் படிப்படியாக ஹீரோவாகியவர் விநாயக் ஜோஷி. இவர்களுடைய திருமண செய்திக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.