தமிழ் திரையுலகில், கில்லி, கிரீடம், போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்து, பின் கதாநாயகனாக மாறியவர் நடிகர் விமல்.

இவர் ஹீரோவாக அறிமுகமாக 'பசங்க' படத்திற்காக, சிறந்த அறிமுக நடிகருக்கான விருது கிடைத்தது. இதையடுத்து, களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, மஞ்சப்பை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்து, தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

நடிப்பை தாண்டி 'மன்னர் வகையறா' படத்தில்... தயாரிப்பாளராகவும் மாறினார். இந்த திரைப்படம் முதலுக்கு மோசம் இல்லாமல் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது.

மேலும் செய்திகள் :நடிக்க ஆரம்பிக்கும் முன்பே நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..! போட்டோ கேலரி..


தற்போது இவரின் கை வசம் 'கன்னி ராசி' என்கிற படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் பட பிடிப்பு பணிகள்,  ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊரில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறார் விமல்.

இவரின் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் பனங்கொம்பு கிராமத்தை, கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாக்கும் விதமாக, விமல் வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளித்து வருகிறார். எந்த ஒரு பந்தா மற்றும் பகட்டும் இல்லாமல், நல்ல எண்ணத்தோடு இவர் செய்து வரும் இந்த செயலை பார்த்து அந்த கிராமத்து மக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள் : பசி பட்டினியோடு சொந்த ஊருக்கு நடந்து செல்லும் குழந்தைகள்! கண் கலங்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட நயன் காதலர்!
 

அதே போல், ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்தை நடிகர் விமலுக்கு தெரிவித்து வருகிறார்கள்.