தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்த ஜோடி மீண்டும் தற்போது இணைந்துள்ள திரைப்படம் “புலிக்குத்தி பாண்டியன்”. முன்னணி இயக்குனரான முத்தையா கொம்பன், குட்டி புலி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர்.தற்போது விக்ரம் பிரபு முத்தைய்யா இயக்கியுள்ளார். 

முதலில் இந்த படத்திற்கு பேச்சி என பெயர் வைக்கப்பட்ட நிலையில் தற்போது புலிக்குத்தி பாண்டியன் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியானது.  முரட்டு தாடி, மீசையுடன் விக்ரம் பிரபு செம்ம மிரட்டலாக இருக்கிறார்.  ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம டெரர் லுக்கிற்கு மாறி இருக்கும் விக்ரம் பிரபுவின் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது. 

தற்போது பொங்கலுக்கு ஜனவரி 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் நேரடியாக ‘புலிக்குத்தி பாண்டி’ ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியைக் கடந்து நேரடியாக டி.வியில் ஒளிபரப்பாக உள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.