தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக, ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள நடிகர், விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கடாரம் கொண்டான்'  திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில், இவருடைய மகன் துருவ் நடித்து முடித்துள்ள 'ஆதித்ய வர்மா' படம் வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து தற்போது விக்ரம் குடும்பத்தில் இருந்து புதிய நடிகர் ஒருவர் உருவாகி உள்ளார். விக்ரமின் சகோதரர், அரவிந் ஜானும் தமிழில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

'எப்போ கலயாணம்' என்கிற பெயரில் உருவாகும் படத்தில் அரவிந்த் ஜான் வில்லனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இருதயராஜ் என்கிற இயக்குனர் இயக்கி உள்ளார். இந்த படத்தில், சாண்ராமிக்சல், கோபிரியல், லாவண்யா, பூஜா ஆகிய நான்கு நடிகைகள் நடிக்கிறார்கள்.

மேலும் ரஞ்சித்குமார், ராகு, மணி,லிவிங்ஸ்டன், மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை, டாக்டர் கீர்த்தவாணி, மாற்று ஷைலா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.