மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், அழுத்தமான வில்லன் வேடத்தில் நடித்து, மிரட்டி வருகிறார். அந்த வகையில் தளபதி விஜய்யுடன் இவர் நடித்துள்ள, 'மாஸ்டர்' திரைப்படம் அனைத்து பணிகளும், முடிவடைந்தும் கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி சொன்னபடி, சொன்ன நேரத்திற்கு படக்குழுவினர் துக்ளக் தர்பார் பட போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!


அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு டேபிளின் முன்பு நின்றிருக்க கீழே தெரியும் பிரதிபலிப்பில் வேறொரு விஜய் சேதுபதி தெரிவது போல் காட்டப்பட்டுள்ளது. பிரசாத் தீனதாயளன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்த்திபன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.