கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, செம பிசியான நடிகர். இமேஜ் பார்க்காமல் எப்படிப்பட்ட கேரக்டர்களிலும் இறங்கி அடிக்க கூடியவர். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாகவும், ‘சீதக்காதி’யில் முதியவராகவும் நடித்து அசத்தி இருந்தார். விக்ரம் வேதாவில் இவர் நடித்த நெகட்டீவ் கேரக்டர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கே வில்லனாக நடித்தார். வருடத்திற்கு 5க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடிக்கும் விஜய் சேதுபதியை அவரது ரசிகர்கள் ”மக்கள் செல்வன்” என அன்போடு அழைக்கின்றனர். 

தற்போது விஜய் சேதுபதி கைவசம், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் ஆகிய படங்கள் உள்ளன. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், விஜய் சேதுபதி நடிப்பால் கவரப்பட்ட டோலிவுட் அவரை அலேக்காக அள்ளிக்கொண்டு போனது.


முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில்  நடித்த விஜய் சேதுபதி, தனது திறமையான நடிப்பால் தெலுங்கு ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார். தற்சமயம் உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி செம்ம வைரலானது. அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு ஒன்றரை கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: இந்த கேவலமான போட்டோவுக்கு முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்... பிகினியில் கடுப்பேற்றிய மீரா மிதுன்...!

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவான விஜய் சேதுபதிக்கு இங்கு ஒரு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு படத்தில் மட்டுமே நடித்த விஜய் சேதுபதிக்கு 1.5 கோடி கொடுப்பதே பெரிசு என தெலுங்கு தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்களாம். அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ‘ஏஏ20’ என்ற படத்திலும், மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்க விஜய் சேதுபதியை புக் செய்ய தயாரிப்பாளர்கள் சென்றுள்ளனர். அவர்களிடம் விஜய் சேதுபதி 1.5 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

இதனால் அந்த படங்களில் விஜய் சேதுபதி நடிப்பது இன்னும் கன்பார்ம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முன்வந்தாலும், அவர் கேட்கும் சம்பளத்தை பார்த்து தெறித்து ஓடுகின்றனராம். டாப் ஹீரோக்கள் அளவிற்கு வில்லன் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் கொடுக்கப்படுவது டோலிவுட்டில் ஏற்கனவே வயிற்றெரிச்சலை கிளப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.