Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விஜய் சேதுபதி முன்னிலையில் 100 திருநங்கைகள் வரைந்த அம்பேதகர் ஓவியம்...

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர். இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி சபாஷ் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

actor vijay sethupathi joins with transgenders for a painting
Author
Chennai Central, First Published Aug 16, 2019, 4:07 PM IST

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர். இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி சபாஷ் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.actor vijay sethupathi joins with transgenders for a painting

நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனையை உடனிருந்து உற்சாகப்படுத்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது தனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அந்நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.actor vijay sethupathi joins with transgenders for a painting

இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரையக் காரணம், பாலின சமத்துவத்தைப் பற்றி பேசிய சுதந்திரப் போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே. ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம்.திருநங்கைகளை கேலி கிண்டலுக்கும் உருவாக்கும் அந்த சமூக மக்களுக்கு பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios