இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தின் பெரும் பகுதி வெளிநாட்டில் படமாக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் தான் படப்படிப்பு முழுவதையும் முடித்து இந்தியாவிற்கு திரும்பினர் படக்குழுவினர்.

இந்த படத்தில் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் இப்படத்தில் வரலட்சுமி, ராதா ரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட நடிகர்களுக்கு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளிநாட்டில் விஜய் நடன குழுவினருடன் நடனமாடிய இன்ட்ரோ சாங் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதையும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கதை:

"வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய் தனது ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார். அவர் வரும் விமானம் தாமதமதம் ஆகிறது. ஆனால் இவர் வருவதற்குள் இவருடைய ஓட்டை கள்ள ஓட்டாக அரசியல் கட்சி ஆட்கள் வைத்து போட விடுகிறார்கள்.

அந்த கள்ள ஓட்டுகளை ஒழிக்க வேண்டும் என விஜய் அரசியலில் குதித்து போராடுகிறார். இந்த படத்தின் மூலம் புதிய புரட்சியே செய்கிறார் என்பதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது. 

இந்த கதை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், திரைப்படம் வெளியானால் தான் உண்மையில் இது தான் படத்தின் கதையா என தெரியவரும். 'சர்கார்' படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.