தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட விழா மேடையில் நடிகர் விஜய் படத்தை கிண்டலடித்துள்ள சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது .  தனுஷ் ,  மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது மிக எதார்த்தமான நடிப்பால் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது . இதுவரை தனுஷ் நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக வசூல் செய்த படம் என்பது மட்டுமின்றி அனைத்து ஊடகங்களும் இவரின் அபார நடிப்பை வெகுவாக பாராட்டின.

 

இந்நிலையில் படம் 100 நாட்கள் தாண்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது .  தற்போது அதிகரித்துள்ள டிஜிட்டல் உலகத்தில் ஒரு திரைப்படம் இரண்டு வாரங்கள் ஓடுவதே  பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில் இப்படம் 100 நாட்களை கடந்திருப்பது  மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது .  இந்த வகையில் படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாட்டத்திற்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில்  நடிகர் தனுஷ் மற்றும் படத்தில் இடம்பெற்றிருந்த  நடிகர்-நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .  இந்த விழா நடந்து கொண்டிருந்தபோது படத்தில் நடித்த ஒரு பிரபலம் மேடையில் பேசிய போது ,  விஜய் நடித்த குருவி திரைப்படம் தான் கடைசியாக 150 நாட்கள் கடந்ததாக சொல்லப்பட்டது அதற்காக விழாவும் எடுக்கப்பட்டது ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றும் கிண்டலாக கூறினார். அப்போது மேடையில் இருந்த தனுஷ் சிரித்தார். இக்கருத்து  மேடையில் சலசலப்பை ஏற்படுத்தியது . 

இதையும் படிங்க ஸ்காட்லாந்து யார்டை விஞ்சிய தமிழக போலீஸ்...!! கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு...!!

பின்னர் பேச வந்த நடிகர் தனுஷ் ,  ஒரு விழா என்றால் அதில் பலர் பல கருத்துக்களை கூறுவர் ,  நான் பேசுவதை  மட்டும் தான் நம்மால் கட்டுப்படுத்த முடியும் மற்றவர்கள் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது .  எனவே இந்த விழாவில் நடந்த நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் .  மற்றவற்றை விட்டு விடுங்கள் என்று மிகவும் நாசுக்காக  பேசினார் .  விஜய் படம் கிண்டலடிக்கபட்டதை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு மென்மையாக பேசினார் என அப்போது மேடையில் இருந்தவர்கள் அவரை பாராட்டினார் .  ஆனாலும் தனுஷ் பட வெற்றி விழாவில் விஜயை கிண்டல் நடித்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க பொன் . ராதாகிருஷ்ணனை நாங்கள் ஒரு ஆளாகவே மதிப்பதில்லை..!! பாஜகவை ஓங்கி குத்திய அமைச்சர் ஜெயக்குமார்..