சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார் . முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார் , பாஜக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான  பொன் ராதாகிருஷ்ணன். தொடர்ச்சியாக  அரசை குற்றம்சாட்டி வருகிறார் ,  அவர் கருத்தை நாங்கள் வழக்கமாக பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்றார். 

அவரின் கருத்தை  நாங்கள் பாஜகவின்  கருத்தாக ஏற்றுக்கொள்வதில்லை.  அரசை குற்றம் சொல்வதையே பொன். ராதாகிருஷ்ணன் வாடிக்கையாக வைத்து உள்ளார். நல்லா தான் இருந்தார் ஏன் அப்படி செய்கிறார் என தெரியவில்லை.  அவர் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு எந்த திட்டதயும் கொண்டு வரவில்லை. அவர் அமைச்சராக இருந்த போது உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றார். அதேநேரத்தில்  நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக செய்யபட்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் 

அப்படியென்றால் இவரது குற்றச்சாட்டு மத்திய அரசை எதிர்த்து உள்ளதா? என்றார், தலைவர் பதவி அவரது கிடைக்குமோ கிடைக்காதோ என்ற விரக்தியின் உட்சத்தில் பொன்னார் இப்படி  பேசிவருகிறார். என்றார்,  திமுக தலைவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் 2021ல் ஆட்சியை தொடர்வது அதிமுக தான். அதில் எந்த  மாற்றமும்  இல்லை.  தற்போதைய நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி பிசுபிசுத்து விட்டது.  2021 தேர்தல் வரை அந்த கூட்டணி நீடிப்பது கடினம் என்றார்.