சென்னை செட்ரல் ரயில் நிலையத்திருந்து 2 வயது குழந்தையை கடத்திய மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தீபக் மண்டல் என்பவரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.  குழந்தையின் தாய் மெர்ஜீனா சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை உடனடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் அசார் அலி. இவருடைய மனைவி மெர்ஜினா,  இவர்களுக்கு ரசிதா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.

 

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (12.1.2020) அன்று இரவு  தூங்கி கொண்டிருக்கும் போது  குழந்தை ரசிதா மாயமானார்.   இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் (13.1.2020) அதிகாலை 2.30 மணிக்கு தனது குழந்தை ரசிதா காணவில்லை என புகார் கொடுத்திருந்தனர். புகாரின் பேரில் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மும்பையிலிருந்து நாகர் கோவில் செல்லும் விரைவுரயில்  திண்டுக்கல் அருகே உள்ள பாலையம் ரயில் நிலையம் அருகே வரும்போது  சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் சிறுவயது குழந்தையை ஒரு இளைஞர் வைத்திருப்பதை கண்ட ரயில் பயணிகள் அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  

அந்த ரயில் பெட்டியில் ரோந்து பணியில் இருந்த  போலீசார் 2 வயது குழந்தை ரஷிதாவையும் மற்றும் குழந்தையை கடத்திச் சென்ற  தீபக் மண்டல் என்பவரையும் திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம்  ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அது சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து காணாமல் போன குழந்தை என்பது தெரியவந்தது. பின்னர் கடத்தி வரப்பட்ட குழந்தை ரசீதா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தீபக் மண்டல் ஆகிய இருவரையும் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.