தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்து வந்தபோது, ரசிகர்களுடன் எடுத்து கொண்ட ஒத்த செல்பி அதிக ரசிகர்களால், ரீ- ட்விட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்கள், நெய்வேலியில் நடந்தது. தளபதி விஜய்யை பார்த்த தினம் தோறும் 100 - க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஷூட்டிங் நடந்து வந்த என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தின் அருகே கூடினர்.

தன்னை பார்க்க வந்த ரசிகர்களை ஏமாற்றாமல் விஜய்யும்  ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு கை அசைத்து, ரசிகர்களின் 
அன்பிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்து வந்தார். இந்நிலையில் திடீர் என பிப்ரவரி 10 ஆம் தேதி, ரசிகர்களை பார்க்க, படக்குழு நிறுத்தி வைத்திருந்த வேன் ஒன்றின் மீது ரிக்ஸ்க் எடுத்து ஏறி, அணைத்து ரசிகர்களையும் பார்த்தவாறு கை அசைத்தார்.

மேலும் ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டது மட்டும் இன்று அதனை தனது டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். 

தற்போது இந்த செல்பி புகைப்படத்திற்கு ட்விட்டரில் அதிகளவில் ரீடுவிட் செய்யப்பட்ட நடிகர் ஒருவரின் புகைப்படம் என்ற பெருமை கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரீடுவிட்டூகளூம், 3 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.