actor Vijay in CBSE textbook Fans showing Mass ...

சி.பி.எஸ்.இ பாடப் புத்தக்கத்தில் தளபதி விஜய் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தளபதி விஜய். வருடத்திற்கு இரண்டுக்கும் அதிகமான படங்களை வெளியிட்டு வரும் விஜய் இந்த ஆண்டில் பைரவா மற்றும் மெர்சல் படங்களை வெளியிட்டு தெறிக்க விட்டார்.

இதில், மெர்சல் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தததோடு ரூ.254 கோடி வசூலும் படைத்துள்ளது. இப்படத்தில் தமிழரின் பாரம்பரியமான வேட்டி, சட்டையில் விஜய் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும், மருத்துவராக மருத்துவ துறை சம்பந்தமான விருது பெறுவதற்காக வெளிநாட்டிற்கு செல்லும்போது கூட வேட்டி சட்டையிலேயே வந்து அசத்தியிருப்பார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 3-வது வகுப்பு பாடப் புத்தகத்தில் வேட்டி, சட்டை தமிழர்களின் பாரம்பரியம் என்ற ஒரு தலைப்பில் விஜய் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்த வரியில் வேட்டி சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.