actor vijay go to chinna for family
இளைய தளபதி விஜய் பிரிட்டனிலிருந்து ஓய்வெடுக்க சீனா சென்றுள்ளார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் பல தடைகளுக்குப் பின் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தளபதி 62படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.சமீபத்தில் இதற்கான போட்டோ ஷூட் நடைபெற்றது. அதில் கிளாசிக் ஆன தோற்றத்தில் விஜய் கலக்கியிருப்பார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார்கள் விஜய் ரசிகர்கள்.

ஆண்டுதோறும் விஜய் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்காக குடும்பத்துடன் பிரிட்டன் செல்வது வழக்கம். விஜயின் மனைவி சங்கீதாவின் பெற்றோர் லண்டனில் இருப்பதால் அங்கு சென்று பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி விட்டு வருவர்.
ஆனால் இந்த ஆண்டு தளபதி 62 படத்தின் போட்டோ ஷூட் இருந்ததால் புத்தாண்டு கழித்தே சென்றுள்ளார் விஜய்.

