நடிகர் விஜய் தேவரகொண்டாவும், தெலுங்கு நடிகை நிஹாரிக்கவும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் காட்டு தீ போல் பரவியது.  

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், தெலுங்கு நடிகை நிஹாரிக்கவும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் காட்டு தீ போல் பரவியது. 

இதுகுறித்து இருதரப்பினருமே எந்த பதிலும் கூறாத நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் விஜய் மற்றும் நிஹாரிக்கவிடம் இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து திரையுலக ரசிகர்களையும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கவர்ந்தவர் விஜய்தேவார கொண்டா. இந்த படத்திற்கு பின் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது.

அந்த வகையில் இவர் நடித்த 'நோட்டா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது மற்றொரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

வளர்ந்து வரும் இளம் நாயகனான இவர், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகை நிஹாரிகாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன.

இந்நிலையில் சமீபத்தில் நிஹாரிக்கா நடித்துள்ள சூரியகாந்தம் படத்தின் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த விஜய் , நிஹாரிகாவின் அண்ணனாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளதாகக் கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.