பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவாரக்கொண்டா, ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்றைய தினம் உலகம் முழுவதும், ஹோலி பண்டிகை மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலரும் ஹோலி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் தேவாரக்கொண்டாவும், கலர் வர்ணங்கள் பூசி ஹோலி பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலர் ஃபுல்லாக கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக திடீரென இவருக்கு காச்சல் ஏற்பட்டுள்ளது. இவர் மிகவும் சோர்வடைந்ததால் உடனடியாக அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் விஜய் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

விஜய் தேவாரக்கொண்டா, தற்போது நான்கு மொழிகளில் நடித்து வரும் 'டியர் காம்ரேட்' படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக ராஷ்மிக்காவிற்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சி பலராலும் விமர்சிக்கப்பட்டது.

60 வினாடி கொண்ட,  இந்த டீசரில் 30 வினாடி விஜய் தேவாரகொண்டா  சண்டை போடும் காட்சியும், மீதம் 30 வினாடி ராஷ்மிகாவிற்கு உதட்டில் முத்தமிடும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதிலிருந்து இது காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படம் என்பதும் தெரியவந்துள்ளது. விஜய் இந்த படத்தில் ஸ்டுடென்ட் லீடராக நடித்து வருகிறார் . 

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக  கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து ராஷ்மிகாவுடன், இவர் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.