இயக்குனர் சித்திக்கின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட விஜய் - காரணம் என்ன?

ப்ரெண்ட்ஸ் படத்தின் இயக்குனர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்திடம் நடிகர் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Actor vijay condolence to friends movie director Siddique's family

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் சித்திக். இவர் தமிழிலும் சில படங்களை இயக்கி உள்ளார். அந்த வகையில் தமிழில் அவர் இயக்கிய ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் ப்ரெண்ட்ஸ். விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் 2001-ம் ஆண்டு திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ப்ரெண்ட்ஸ் படம் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த படமாக இருக்கிறது. அந்த அளவுக்கு காமெடி காட்சிகள் நிறைந்த படமாக அதனை இயக்கி இருந்தார் சித்திக்.

இதையடுத்து தொடர் தோல்வியால் துவண்டு இருந்த விஜய்க்கு காவலன் படம் மூலம் கம்பேக் கொடுத்ததும் இயக்குனர் சித்திக் தான். இப்படி விஜய்யின் சினிமா கெரியரில் இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சித்திக் கடந்த ஆகஸ்ட் 8-ந் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... ரஜினியின் நண்பர்களிடம் வசமாக சிக்கிய விஜய்! தளபதிக்கு தலைவலியாக மாறிய சூப்பர்ஸ்டாரின் தோஸ்துகள்- சிக்கலில் Leo

Actor vijay condolence to friends movie director Siddique's family

சித்திக்கின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாததால் சில தினங்கள் கழித்து அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார் நடிகர் சூர்யா. ஆனால் விஜய், நடிகர் சித்திக்கின் மறைவுக்கு எந்தவித இரங்கலும் தெரிவிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் சித்திக்கின் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி இருக்கிறார் விஜய். அதுமட்டுமின்றி வெளிநாட்டில் இருந்ததன் காரணமாக சித்திக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை எனக்கூறி அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் விஜய். 

இதையும் படியுங்கள்... ஆரம்பிக்கலாமா... அதகளமாக தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அலப்பறையான அப்டேட் வந்தாச்சு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios