உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் காரணமாக, ஓய்வு கிடைத்தும் பிரபலங்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. பிரமாண்டமாக நடக்க வேண்டிய திருமணங்கள் எளிமையாக நடைபெற்று வருகிறது என்பது நாம் அறிந்தது தான்.

நேற்றைய தினம் கூட, நடிகர் ராணாவின் திருமணத்தில் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் அவர்கள் நெருங்கிய சொந்தகளாக இருந்தும், உரிய கொரோனா சோதனைக்கு பின்னரே இவர்கள் திருமண மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் பிரபலமும், அவருடைய உறவினர் ஸேவியர் பிரிட்டோ மகள் சினேஹா பிரிட்டோ திருமணத்தில் தவறாமல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தளபதி நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தை, பிரிட்டோ தான் தயாரித்துள்ளார். 

ஸேவியர் பிரிட்டோவின் மகள் சினேஹாவிற்கும், மறைந்த பிரபல நடிகர் முரளியின் இரண்டாவது மகன், அதாவது நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் சென்னை சாந்தோம் சர்ச்சில் வரும் 23ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். நடிகர் விஜய்யும் பிரிட்டோவின் சொந்தக்காரர் என்பதால், கட்டாயம் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவர் என தெரிகிறது. ஏற்கனவே இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்தில் விஜய் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.