Asianet News TamilAsianet News Tamil

"உயிர்ப்பலி வாங்கிய நீட்".. சர்ச்சையோடு வெளியான First Look Poster - விதார்த் & வாணி இணையும் புதிய படம்!

Anjaamai : Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்து வழங்கும் அஞ்சாமை என்ற படத்தில் பிரபல நடிகர் விதார்த் மற்றும் நடிகை வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் அப்படத்தின் First Look Poster வெளியாகியுள்ளது.

Actor Vidharth and Vani Bhoja Starring Anjaamani movie first look poster out now ans
Author
First Published May 23, 2024, 6:52 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான மாதவனின் "மின்னலே" திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் விதார்த். "மௌனம் பேசியதே", "சண்டக்கோழி", "திருப்பதி" மாற்றும் "குருவி" என்று பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, தனது சரியான வாய்ப்புக்காக காத்திருந்தார் விதார்த். 

அந்த நிலையில் தான் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பிரபு சாலமனின் "மைனா" என்கின்ற திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. நார்வேயில் நடைபெறும் தமிழ் திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. சுருளி என்கின்ற அந்த கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். 

'பிள்ளையார் சுழி' திரைப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் படக்குழு நம்பிக்கை!

அதன் பிறகு தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், அவருடைய நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று தற்பொழுது உருவாகியுள்ளது. அந்த திரைப்படத்திற்கு "அஞ்சாமை" என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக பிரபல நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். 

வாணி போஜன் தொடக்க காலத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. மாடல் அழகியான அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "ஓர் இரவு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரை உலகில் களமிறங்க, இப்பொது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் விதார்த்துடன் நடித்துள்ளார். 

இன்று அந்த படத்தின் பர்ஸ்ட் புக் போஸ்டர் வெளியாகி உள்ளது, அதில் "உயிர்பலி வாங்கிய நீட்" என்று செய்தித்தாளில் எழுதி இருப்பது போன்ற வாசகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நீட் தேர்வால் உயிரிழந்த ஒருவரின் கதையாக இப்படத்தின் கதைகளம் அமைந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். வருகின்ற ஜூன் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Director Sundar C : ஹீரோஸ் யாருன்னு தெரியும்.. ஆனா ஹீரோயின் யாருனு தெரியுமா? கசிந்த கலகலப்பு 3ன் ரகசியம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios