Asianet News TamilAsianet News Tamil

நடிகை அனுஷ்காவை கலங்க வைத்த பிரபல நடிகரின் மரணம்..!

பிரபல நடிகர் தன்னுடைய 77 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து அவருக்கு அனுஷ்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

actor vedham nagaiya pass away
Author
Chennai, First Published Mar 28, 2021, 6:04 PM IST

பிரபல நடிகர் தன்னுடைய 77 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து அவருக்கு அனுஷ்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு, தெலுங்கு திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'வேதம்'. இந்த படம்தான் தமிழில் 'வானம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் பரத், சிம்பு,அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'வேதம்' படத்தில் நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா 'வானம்' படத்திலும் நடித்திருந்தார்.

actor vedham nagaiya pass away

இந்நிலையில் 'வேதம்' படத்தில் நடிகர் நாகையா... ராமு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வயதான பின்னர் இவர் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், அவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது.  இந்த படத்தை தொடர்ந்து, ஸ்பைடர், பாகமதி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், வேதம் நாகையா என்றே தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்: வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க தோன்றும் அழகில் கிகி..! உடல் எடை கூடி சும்மா கும்முனு மாறிய லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

actor vedham nagaiya pass away

இவர் வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தன்னுடைய முதல் படத்திலேயே நடிகை அனுஷ்காவுடன் நடித்த இவருக்கு அனுஸ்கா இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  "நல்ல ஆத்மா நம்மை விட்டு சென்றுவிட்டது. அவர் கண்டிப்பாக சொர்க்கத்துக்கு தான் செல்வார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவது இவர்களா? யாரும் எதிர்பார்த்திடாத பிரபலங்களின் லிஸ்ட்!
 

மேலும் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அனுஷ்கா பகிர்ந்துள்ளார் இவரைத் தொடர்ந்து பல தெலுங்கு பிரபலங்கள் இவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios