பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவது இவர்களா? யாரும் எதிர்பார்த்திடாத பிரபலங்களின் லிஸ்ட்!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நிறைவடைந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அடுத்த சீசன் குறித்த தகவல்கள் தற்போது உலா வர துவங்கிவிட்டது.
கடந்த பிக்பாஸ் நிகழ்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா ஆகியோர் கலந்து கொண்டதால் இந்த முறை, குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்களால் விரும்பப்படும் சில பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எப்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்பது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாவதற்கு முன்பே, நிகழ்ச்சி குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாக துவங்கி விட்டது.
அந்த வகையில் ஏற்கனவே... பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை இந்த முறை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள சிலரது பெயர்கள் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இருந்து மட்டும், அஸ்வின், பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இவர்களை அடுத்து, நடிகர் சித்தார்த், ராதா ரவி, நடிகை ராதா, சோனா, லட்சுமி மேனன் ஆகியோர் பெயர் வெளியாகியுள்ளது.
கடந்த முறை பிக்பாஸ் பட்டியலில் தன்னுடைய பெயர் அடிப்பட்டபோதும், கோவமாக பதிலளித்த நடிகை லட்சுமி மேனன் பெயர் அடிபட்டாலும் அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
வழக்கம் போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்களின் பெயர் யுகத்தின் அடிப்படையில் வெளியாவது போல் தான் இந்த முறையும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.