சில நாட்களுக்கு முன்பு பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகருமான வரதராஜன் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் தன்னுடைய நண்பர், அதுவும் அவர் ஒரு பிரபலம்... இரண்டு நாட்களாக காச்சல் அவருக்கு இருந்தது, பின் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே கொரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனையில் சேர்க்க பல இடங்களுக்கு சென்றும் ஒரு பெட் கூட அவருக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்று இருந்தால் நோயாளிகள் புறக்கணிக்கபப்டுவதாகவும் அவர் தெரிவித்தது பீதியடையவைத்தது. இவரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சுகாதார துறையமைச்சர் பேசினார். 

கொரோனா அதிக அளவில் பரவி வரும் இந்த நிலையில், மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்துவது போல், தவறான செய்திகளை பரப்பியதற்காக வரதராஜன் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என எச்சரித்தார்.

சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு படுக்கைகள் இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, அந்தர் பல்டி அடித்த செய்திவாசிப்பாளர் வரதராஜன், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் கூறிய நண்பர் தற்போது மருத்துவமனையில் நல்ல முறையில்  சிகிச்சை பெற்று வருவதாகவும். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும். அணைத்து மருத்துவமனைகள், சுகாதார துறை ஊழியர்கள், அமைச்சர்கள், துப்புரவு தொழிலாளர்கள் சிறப்பாக சேவை செய்து வருவதாக தெரிவித்தார். இந்த வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் வரதராஜன் தன்னுடைய நண்பர் என குறிப்பிட்ட அந்த பிரபலம் பிரபல சமைல் கலை நிபுணர் செல்லப்பா என்று தெரியவந்துள்ளது. சென்னையில் உணவுத் துறையில் முன்னணி வகிப்பவர்களில் இவரும் ஒருவர்.  ஆயிரக்கணக்கான பிரமாண்ட நட்சத்திர திருமணங்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கும் கேட்டரிங் முறையில் உணவு வழங்கி வருகிறார்.  குறிப்பாக அயப்பன் பக்தர்களுக்கு இலவச உணவு சமைத்து வழகிவருபவர்களில் செல்லப்பாவும் ஒருவர். இவர் நேற்று கொரோனாவால் மரணமடைந்துள்ளார். இது இவருடைய சமையல் பிரியர்களை பெருமளவு பாதித்துள்ளது. இவருடைய மறைவிற்கு மைலாப்பூர் வாசிகள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.