நகைச்சுவை நடிகர் வடிவேலு தேசிய கட்சியான பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி  இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் வடிவேலு சில காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலைக் குறித்து அவர் தரப்பில் இருந்து எந்த உறுதியான விளக்கமும் வெளியாக வில்லை.

இவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்காமல் இருந்தாலும் அனைத்து சமூகவலைத் தளங்களிலும் மீம்ஸ் மற்றும் காமெடிகள் மூலம் தொடர்ந்து அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறார். காரணம் அந்த அளவிற்கு காமெடி நடிகர் வடிவேலு மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைகிறார் என்றொரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சமீபகாலமாக ஏராளமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பாஜக கட்சியில் இணைந்து வருகின்றனர். இசையமைப்பாளர் கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கௌதமி, நமீதா, விஜயக்குமார், காயத்ரி ரகுமான், எஸ்.வி. சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், நடிகை குஷ்பு என பலரும் தற்போது தேசிய கட்சியான பாஜகவில் இணைந்து இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து நகைச்சுவை பிரபலம் நடிகர் வடிவேலும் பாஜவில் இணைய இருப்பதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவரது தரப்பில் இருந்து எந்த உறுதியான விளக்கமும் வெளியிடப்படவில்லை.