தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. தற்போது சினிமாவில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் நாயகன் என்று புகழும் அளவிற்கு மீம்ஸ் கிரியேட்டர்களும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இளம் தலைமுறையாலும் இன்றளவும் வடிவேலுவின் காமெடிகள் உயிர்ப்புடன் வலம் வருகின்றன. சினிமாவையும் தாண்டி வடிவேலுவிற்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் காமெடி நடிகர் சிங்கமுத்து. அதன் பிறகு ஏற்பட்ட நிலப்பிரச்சனை தொடர்பாக இருவரும் பிரிந்தனர். சினிமாவிலும் இவர்களது கூட்டணி முடிந்தது. நில மோசடி தொடர்பாக வடிவேலு நீதிமன்றம் வரை சென்றார். அந்த வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளது. 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

இந்நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூ-டியூப் சேனலுக்கு சிங்கமுத்து பேட்டி அளித்திருந்தார். அதில் வடிவேலுவை சிங்கமுத்து தரக்குறைவாக விமர்சித்துள்ளார். சில இடங்களில் ஒருமையில் பேசியும் அவமதித்துள்ளார். இதனால் கோபமடைந்த வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  சிறப்பு அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பது,

இதையும் படிங்க:  பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும் நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த சில உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை திரு.சிங்கமுத்து அவர்களிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர்ஷிப் என்கிற வாட்ஸ் அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் திரு.சிங்கமுத்துவுக்கும் இடையே வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் திரு.மனோபாலாவின் மீதும், திரு.சிங்கமுத்துவின் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். (வீடியோ இணைப்புடன் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.