Asianet News TamilAsianet News Tamil

தலைமறைவான நடிகர் வடிவேலு..! வெளிவந்த பகீர் தகவல்...! 

actor vadivelu abscond for cheeting case
actor vadivelu abscond for cheeting case
Author
First Published Jul 13, 2018, 3:31 PM IST


'எலி' படத்தில் ஏற்பட்ட 1 கோடி நஷ்டத்தை ஏற்க மறுத்து நடிகர் வடிவேலு மதுரையில் தலைமறைவாகியுள்ள உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேலு:

தமிழ் சினிமாவில் ஈடு இணை இல்லா காமெடி நடிகர் 'வைகை புயல் வடிவேலு'. தற்போது புதிதாக 100 காமெடி நடிகர்கள் நடித்து கொண்டிருந்தாலும், இவருக்கு இணையாக ஒருவரால் கூட வர முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.actor vadivelu abscond for cheeting case

ஹீரோவாக வடிவேலு:

'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற பின் தொடர்ந்து ஹீரோவாக கதையம்சம் கொண்ட கதைகளையே தேர்வு செய்து நடிக்க துவங்கினார் வடிவேலு. 

இந்த படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த, எலி, தென்னாலிராமன் போன்ற படங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெறவில்லை. actor vadivelu abscond for cheeting case

எலி பட நஷ்டம்:

இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு, வடிவேலு இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடித்தார். இந்த  படத்தின் தயாரிப்பு செலவுகளுக்கு, வடிவேலு சிபாரிசின் பெயரில் ராம்பிரபு என்பவர் தயாரிப்பாளர் சதீஷ் என்பவருக்கு ஒரு கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். 

படம் வெளியானதும் இந்த தொகையை திருப்பி கொடுதுவிடுவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் 'எலி' திரைப்படம் படு தோல்வி அடைந்ததால் பட தயாரிப்பாளர் சதீஷ், கடனாக பெற்ற 1 கோடி ரூபாய் பணத்தை வடிவேலுவிடம் பெற்றுக்கொள்ளும் படி கூறியுள்ளார். actor vadivelu abscond for cheeting case

பல வருடங்களாக போராடியும் வடிவேலு மற்றும் சதீஷ் இருவரும் பணத்தை திருப்பி கொடுக்காததால். ராம்பிரபு சென்னை குற்றபிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். 

இந்த புகாரின் அடிப்படையில், தற்போது பட தயாரிப்பாளர் சதீஷிடம் விசாரணை செய்து வரும் போலீசார், இந்த புகார் சம்பந்தாக நடிகர் வடிவேலுவையும் தேடி வருகின்றனர். 

மேலும் தற்போது வடிவேலு அவருடைய சொந்த ஊரான, மதுரையில் பதுங்கி உள்ளார் என கூறப்படுகிறது. actor vadivelu abscond for cheeting case

இந்த படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது... 'படத்தை நான் இயக்கி இருந்தாலும், அனைத்து காட்சிகளிலும் வடிவேலுவின் தலையீடு இருந்தது, தான் இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே, '23 ஆம் புலிகேசி' படத்தின் சர்ச்சையில் இருந்து தற்போது தான் வடிவேலு மீண்டு வந்த நிலையில், இப்போது எலி பட சர்ச்சையில் சிக்கி தலை மறைவாகி உள்ளது திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios