'மாரி' படத்தில் நடித்த வில்லன் நடிகர், டொவினோ தாமசுக்கு குழந்தை பிறந்துள்ள விஷயத்தை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ’மாரி 2’. வில்லன் கேரக்டரில் நடித்து, மிரட்டி இருந்தவர் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக குழந்தை பிறந்துள்ளது.

டொவினோ தாமஸ் லிடியா என்கிற பெண்ணை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே லிசா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் லிடியா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் இது குறித்து தெரிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டொவினோ தாமஸ் மீண்டும் தந்தையானதற்கு, அவருடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் தாய் மற்றும் சேய் என இருவருமே நலமுடன் இருப்பதாகவும், ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை அவருடைய குடும்பத்தினர் கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.