களவாணி படத்தில் ஓவியாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் திருமுருகன். இதனை தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் கிராமத்து சாயல் கலந்த கதாபாத்திரங்களில்  நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான 'பென்சில்' திரைப்படத்தில் கூட பிக் பாஸ் கும்பத்தில் சமீபத்தில் இணைந்த சுஜா வருணிக்கு ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் இவருக்கும் இவருடைய உறவுக்கார பெண் மோகன ப்ரியாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இவர்களுடைய திருமணம் வருகிற 4ம் தேதி தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு கிராமத்தில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

தற்போது  திருமுருகன் ‘ஓணான்’, ‘அடங்காதே’, ‘டார்ச்லைட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ள மோகன ப்ரியா அரசு வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் மற்றும், அவருடைய குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொள்வார்கள் என திருமுருகன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.