பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாகியுள்ளது.

இவரின் மன அழுத்ததிற்கு காரணமாக கூறப்படும் பிரபலங்கள் மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.  சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்த போதிலும், அவருக்கு பட வாய்ப்புகள் வராமல் தாக்கப்பட்டதாக பல பாலிவுட் பிரபலங்கள் ஆணித்தனமான குற்ற சாட்டை வைத்துள்ளனர்.

இவருடைய தற்கொலை சம்பவத்தில் இருந்து, இவருடைய குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் பலர் இன்னும் மீண்டு வராதா நிலையில், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அன்று மூச்சு, பேச்சு இல்லாமல் ஆபுலன்சில் அழைத்து செல்லப்பட்ட, தன்னுடைய  எஜமான் சுஷாந்த் வருவார் என ஒவ்வொரு நாளும் நம்பி நம்பி ஏமார்ந்து கொண்டிருக்கிறது அவர் வளர்த்து வந்த செல்ல நாய்.

அவர் வீட்டிற்கு வராததால், சோகமாகவே காணப்படும் அந்த நாய், கார் சவுண்டு கேட்கும் போதெல்லாம் சுஷாந்த் வீட்டுக்கு வந்து விட்டாரா என ஓடி சென்று பார்க்கிறது. அவர் வரவில்லை வேறு யாரோ என தெரிந்ததும் சோகமாக வீட்டிற்குள் வருகிறது

மேலும் சுஷாந்தின் படுக்கை அறையை சுற்றி வருகிறது இதன் தவிப்பை அறிந்து, சுஷாந்த் வீட்டில் உள்ளவர்கள் அவருடைய புகைப்படத்தை செல் போனில் வைத்து தந்தால் அதனை நக்கி தன்னுடைய பாசத்தை காட்டுகிறது. இந்தக்காட்சிகள் பார்பவர்களையே கண் கலங்க வைத்துள்ளது.