இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறான MS Dhoni untold Story என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவின் பட்டி, தொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதான இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்துள்ள Chhichhore படம் தற்கொலைக்கு எதிராக போராடி வெல்வது பற்றியது. இப்படிப்பட்ட படத்தில் நடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க:  சிக்கென ஸ்லிம் லுக்கில் நயன்தாரா.... புடவையில் இதுவரை யாருமே பார்த்திருக்காத ஸ்பெஷல் போட்டோ ஷூட்...!.

தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். சுஷாந்தின் நண்பர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து சடலத்தை மீட்டுள்ளனர். 5 நாட்களுக்கு முன்பு சுஷாந்திடம் வேலை பார்த்து வந்த பெண் மேனேஜர் திஷா சோலியன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், சுஷாந்தும் தற்கொலை செய்து கொண்ட பல விடை தெரியாத மர்மங்களை கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க:  இறந்த நிலையில் படுக்கையில் கிடக்கும் சுஷாந்த்... கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பரிதாபமான புகைப்படம்...!

இந்நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டில் தனியாக இருந்த சுஷாந்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அது தெரிந்த பாலிவுட் பிரபலங்கள் சிலரும் அவருடன் அமர்ந்து பேசி தீர்க்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தான் மிகுந்த கஷ்டத்தில் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாத சுஷாந்த் எப்போதும் சிரித்த முகத்துடனே வலம் வந்துள்ளார். இருப்பினும் அவருடைய மன அழுத்தம் அதிகமானதால் தான் சுஷாந்த் தற்கொலைன் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.