நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கங்கோரா ஆகியோர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கங்கோரா ஆகியோர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'NGK ' திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த், இயக்கத்தில் 'காப்பான்' படத்தின் நடித்தார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது சூர்யா 'இறுதிசுற்று' பட இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கங்கோரா ஆகியோர் பிரசித்தி பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிபட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இரண்டு நடிகர்களை வைத்து உருவாகும் இந்த படத்தில் மற்றொரு நாயகனாக, நடிகர் விஜய் தேவாரகொண்டா நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.