தளபதி விஜய்க்கு சினிமா உலகில் சூப்பர் மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்த திரைப்படம் துப்பாக்கி. 2012ஆம் ஆண்டு தாணு தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருப்பார், ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டாடித்தன. 

இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் வெளியான இந்த படம் இந்தி திரையுலகில் தளபதிக்கு ஒரு தனி மார்க்கெட்டையே உருவாக்கி கொடுத்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வேற லெவலில் வெற்றி பெற்றது. ராணுவ வீரராக இருந்தாலும், செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் விஜய் புகுந்து விளையாடியிருப்பார். இந்த படம் மூலமாக தான் ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தை உலக அளவில் ட்ரெண்டானது. 


இதையும் படிங்க: வீண் விளம்பரம் தேடி புண்ணான மீரா மிதுன்... இவ்வளவு ஹாட்டா டிரஸ் போட்டும் எல்லாம் வேஸ்டா போச்சே...! 

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு முன்னாடி நடிக்கவிருந்தது நம்ம சூர்யாவாம்.  விஜய்க்கு முன்னாடி இந்த கதையை ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யாவிடம் தான் கூறினாராம். என்ன காரணமோ தெரியவில்லை அப்போது சூர்யா அந்த படத்தில் நடிக்கவில்லை. அப்படி சூர்யா மட்டும் நடித்திருந்தால் சூப்பர் ஸ்டார் அளவிற்கு பெயரும் புகழும் கிடைத்திருக்கும். அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டார். ஏனென்றால் தளபதி விஜய்யை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்திற்கு ஒப்பிட்டு பேச காரணம் துப்பாக்கி படமும் தான்.