இந்த விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்றதால், புதிய கல்வி கொள்கை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே சூர்யாவின் பேச்சுக்கு ரஜினி ஆதரவு அளித்து பேசினார்.
என்னுடைய நிஜ வாழ்க்கையில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசியது, அதற்கு பாஜக, அதிமுகவிலிருந்து வந்த எதிர்வினையும் பேசு பொருளானது. இந்த விவகாரம் தொடபாக சூர்யா 2 பக்க அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பிறகு பல தரப்பினரும் நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். சென்னையில் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்றதால், புதிய கல்வி கொள்கை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே சூர்யாவின் பேச்சுக்கு ரஜினி ஆதரவு அளித்து பேசினார்.

