இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கதில், நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'காப்பான்'. இந்த படத்தின் அனைத்து பணிகளும் முழுவதும் முடிவடைந்த நிலையில், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. 

இந்நிலையில் இந்த படம் சென்சார் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 'காப்பான்' படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். 

என்.ஜி.கே., படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு, இப்போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். மேலும் சாயிஷாவின் கணவர் நடிகர் ஆர்யாவும் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூர்யா,  சுபாஷ் என்ற கமாண்டோ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்திய பிரதமர் கேரக்டரில் மோகன்லால் நடித்துள்ளார். இந்த படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.