இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி அடுத்ததாக நடிகர் சசிகுமாரை வைத்து 'நாடோடிகள் 2' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலியும், முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் பரணியும் நடித்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் 'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஒரு உதவி செய்ய ஒப்புக்கொண்டுள்ளார் நடிகர் சூர்யா. அது என்னவென்றால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வரும் ஜூலை 2 ஆம் தேதி நடிகர் சூர்யா அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட உள்ளார். 

ஏற்கனவே 'பார்ட்டி' படத்தில் சூர்யா மற்றும் அவருடைய தம்பி கார்த்தி இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் வெளியாக உள்ள நிலையில், சூர்யா சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாடோடிகள் 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கையும் வெளியிடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.