Asianet News TamilAsianet News Tamil

நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில்.. ! பெற்றோர் இதனை கண்டிப்பாக பண்ணுங்க.. நடிகர் சூர்யா வீடியோ வெளியீடு..

பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து நடிகர் சூர்யா பேசி வீடியோ வெளியிட்டுள்ளார், இதனை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 

Actor Suriya video released - About Gov School Education
Author
Tamilnádu, First Published Apr 22, 2022, 3:22 PM IST

பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து நடிகர் சூர்யா பேசி வீடியோ வெளியிட்டுள்ளார், இதனை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இதுக்குறித்து அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில்,” சிறந்த மனிதர்தான் சிறந்த பள்ளிகளை உருவாக்க முடியும். பள்ளிகள் என்பது வெறும் கட்டிடம் இல்லை. அங்கு தான் நம்முடைய நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் பல லட்சம் ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணவர்கள் படிக்கின்றனர். 

ஆசிரியர், பெற்றோர்கள், பொறுப்புமிக்க கல்வியாளர்கள் என்று இந்த மூன்று தரப்பும் ஒன்றாக சேர்ந்தால் சிறந்த பள்ளிகளை உருவாக்க முடியும்.மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை தர முடியும். மகிழ்ச்சியான கல்வி சூழலை தர வேண்டியது நம் எல்லோருடைய பொறுப்பு. அரசு பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களை தமிழ்நாடு அரசு மறுக்கட்டமைப்பு செய்யவுள்ளது. மாணவர்களில் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் என பல தரப்பினரும் இக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.

இந்த முயற்சி மூலம் ஆக்கபூர்வமான நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வழங்கப்படுவதையும் இடைநிற்றலை குறைத்திடவும் இக்குழு வழிவகை செய்கிறது. மாற்றுதிறனாளி குழந்தை உள்ளிட்ட சிறப்பு மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் அரசு பள்ளிகளில் இடம்பெற்றுள்ளதை இந்த குழுவினர் உறுதி செய்வர்.

பள்ளிகளின் கட்டிட வசதி, கழிப்பறை வசதி, மதிய உணவு திட்டம் உள்ளிடவற்றையும் அரசு தரும் நலத்திட்ட உதவிகள் முறையாக சென்றடைகிறதா போன்றவற்றையும் குழு உறுப்பினர்கள் கவனிப்பர். நம்முடைய குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்க வேண்டுமேன்றால், அனைத்து பெற்றோர்களும் நாளை நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பு நிகழ்வில் கலந்துக்கொள்ளுவது மிக மிக அவசியம்.சிறந்த பள்ளியும், சிறந்த கல்வியும் மாணவர்களது உரிமை. அவை கிடைக்க உதவி செய்வதும் துணை நிற்பதும் நம்முடைய கடமை என்று கூறியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios