Actor Suriya : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இவ்வாண்டு மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படங்களில் அதுவும் ஒன்று.

நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில், மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு கதைகளத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார். அண்மையில் வெளியான இந்த திரைப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த படத்திற்காக பல பிரத்தியேகமான பயிற்சிகளை நடிகர் சூர்யா மேற்கொண்ட நிலையில், பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் என்றும். OTT தளத்தில் வெளியாகும் பொழுது, 30க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த திரைப்படம் டப் செய்து வெளியிடப்படும் என்றும் பட குழுவினர் அறிவித்துள்ளனர். 

Nayanthara : அட்டை படத்திற்கு... கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து முதல் முறையாக கவர்ச்சியாக போஸ் கொடுத்த நயன்!

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே பெருந்தகை செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இணைவார் என்றும், அல்லது வெற்றிமாறனின் "வாடிவாசல்" திரைப்படத்தில் அவர் இணைவார் என்றும் தகவல்கள் வெளியானது. 

ஆனால் ஏற்கனவே வெற்றிமாறனின் "வாடிவாசல்" படத்திலிருந்து சூர்யா விலகியுள்ள நிலையில், தற்போது பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த சூழலில் தற்பொழுது இணையத்தில் ஒரு போட்டோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகர் சூர்யா, குதிரையேற்ற பயிற்சியை பிரத்தியேகமாக தற்பொழுது பயின்று வருகிறார்.

இது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 44 வது பட த்திற்காக என்று தகவல்கள் கூறப்படுகிறது. சூர்யாவை வைத்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை களத்தை உருவாக்க கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டைலில் திட்டங்களை தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து "பேட்ட" என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தவர் கார்த்திக் என்பது அனைவரும் அறிந்ததே.

Manasvi: மானஸ்வியோட 11-ஆவது பிறந்தநாளுக்கு.. காரை பரிசாக கொடுத்த நடிகர் 'கொட்டாச்சி'! குவியும் வாழ்த்து!