Suriya Video: ஒரு கண்ணில் துணிச்சல்.. ஒரு கண்ணில் கருணை! அபூர்வ கலைஞன் விஜயகாந்த் - நடிகர் சூர்யா உருக்கம்!

பழம்பெரும் நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு நடிகர் சூர்யா சமூக வலைதள மூலம் வீடியோ வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
 

Actor Suriya share the condoled by vijayakanth mma

நடிகர் விஜயகாந்துக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து, வென்டிலேட்டர் மூலம் கேப்டனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

விஜயகாந்தின் மரணம் குறித்து அறிந்த, தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தேமுதிக கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். தற்போது இவருடைய உடல், தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில்... ஆயிரக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும், வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான போலீசாரும் கட்சி அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

Actor Suriya share the condoled by vijayakanth mma

Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!

அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு... அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளையும் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அதேபோல் சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்களுடைய அஞ்சலியை சமூக வலைதளம் மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது...  "அண்ணன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்கிற செய்து கேட்டு மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழந்த அபூர்வ கலைஞன் அவர்கள். கடைக்கோடி மக்கள் வரைக்கும் எல்லோருக்கும், எல்லாம் உதவிகளும் செய்து... புரட்சி கலைஞராக வாழ்ந்து நம் மனதில் இடம்பிடித்தவர். அண்ணன் விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறேன். அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என சூர்யா தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளார். 

Actor Suriya share the condoled by vijayakanth mma

ஓகே சொன்ன ரஜினி! ஒரு கோடிக்கு பேரம் பேசியும் முடியாதுன்னு சொன்ன விஜயகாந்த்.. தெறித்து ஓடிய Coca-Cola நிறுவனம்!

மேலும் அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! என தெரிவித்துள்ளார். விஜயகாந்துடன் சூர்யா பெரியண்ணா படத்தில் நடித்துள்ளார். அதே போல் சூர்யாவின் மாயாவி படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios