MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஓகே சொன்ன ரஜினி! ஒரு கோடிக்கு பேரம் பேசியும் முடியாதுன்னு சொன்ன விஜயகாந்த்.. தெறித்து ஓடிய Coca-Cola நிறுவனம்!

ஓகே சொன்ன ரஜினி! ஒரு கோடிக்கு பேரம் பேசியும் முடியாதுன்னு சொன்ன விஜயகாந்த்.. தெறித்து ஓடிய Coca-Cola நிறுவனம்!

கோககோலா நிறுவனத்தில் நடிக்க, 80-களில் விஜயகாந்துக்கு ரூபாய் 1 கோடி வரை கொடுக்க அந்த நிருவனம் தயாராக இருந்தும், நடிக்க முடியாது என கேப்டன் கூறியது உங்களுக்கு தெரியுமா?  

2 Min read
manimegalai a
Published : Dec 28 2023, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து உடல் நலக்குறைவு காரணமாக, ஓய்வில் இருந்தார். இதை தொடர்ந்து கடந்த மாதம் மாதாந்திர பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்ட விஜயகாந்துக்கு, சுவாச பிரச்சனை இருப்பதாகவும், நுரையீரல் தொற்று இருப்பதாகவும் கூறி, தொடர்ந்து சிகிச்சை மேற்பட்டபட்ட நிலையில், உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
 

26

இதன் பின்னர், தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் விஜயகாந்த் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்தார். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு திணறல் உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இன்று அதிகாலை முதலே... விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, இன்று காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் உயிரிழந்துவிட்டதாக அதிகார பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.

அவர் உடலை கூட பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்! விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இரங்கல்
 

36

சற்றும் எதிர்பாராத இந்த தகவல், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களை கலங்க செய்தது. விஜயகாந்த் மறைவை தொடர்ந்து அடுத்தடுத்து அவரை பற்றிய பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விஜயகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்காக கோகோகோலா நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

46

1980-களில் Coca-Cola தன்னுடைய குளிர்பானத்தை தமிழகத்தில் விளம்பரப்படுத்த முன்னணி நடிகர் - நடிகைகளை டார்கெட் செய்து, விளம்பரங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Coca-Cola நிறுவனம் கொடுத்த பெருந்தொகைக்கு ஆசை பட்டு, இது போன்ற விளம்பரங்களில் நடித்தார்.

Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!
 

56

விஜயகாந்துக்கு அப்போதே, ரூபாய் 1 கோடி கொடுப்பதாகவும் Coca-Cola நிறுவனத்தில் விளம்பரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியது. அதற்க்கு விஜயகாந்த் "நீங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு நான் உங்களின் விளம்பர படத்தில் நடித்தால், என்னுடைய ரசிகர்கள் Coca-Cola-வை வாங்குவார்கள். அதனால் அவர்களின் உடல்நலம் என்ன ஆகும்? இது  பழசாறு இல்லை... என கூறி இந்த விளம்பரத்தில் நடிக்க முடியாது என கட் அண்ட் ரைட்டாக பேசி அந்த நிறுவனத்தை தெறித்து ஓடவிட்டாராம்.

66
vijayakanth

vijayakanth

பணம் மட்டுமே குறி என நினைக்கும் சில நடிகர்கள் மத்தியில்... அந்த காலத்திலேயே ரசிகர்களின் உடல் நலன் தான் முக்கியம் என ரூ.1 கோடியை நிராகரித்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடித்தக்கது.

ரோஜா, த்ரிஷா, ஜூனியர் NTR உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்..!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved