Actor Suriya :இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடக்ககூடாது! நடிகைக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து சூர்யா கருத்து
Actor Suriya : எதற்கும் துணிந்தவன் படத்தின் புரமோஷனுக்காக நேற்று கேரளா சென்ற நடிகர் சூர்யா, மலையாள நடிகைக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து பேசினார்.
மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு படப்பிடிப்பு சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவரை வழிமறித்து கடத்தி சென்ற ஒரு கும்பல், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பல்சர் சுனில் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பல்சர் சுனிலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து திலீப்பை கைது செய்த போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தினர். தற்போது திலீப் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் புரமோஷனுக்காக நேற்று கேரளா சென்ற நடிகர் சூர்யா, நடிகை கடத்தல் விவகாரம் குறித்து பேசினார். “இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாயமற்ற செயல். நவீனமான உலகத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கவே கூடாது. அதை நினைக்கும் போது மனசு வலிக்கிறது” எனக் கூறினார்.
எதற்கும் துணிந்தவன் படம் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து தான் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். வருகிற மார்ச் 10-ந் தேதி இப்படம் திரைகாண உள்ளது.
இதையும் படியுங்கள்... Thalapathy 67 update : தளபதி 67-ல் ஹீரோயினும் இல்ல.. பாட்டும் இல்லையா? முரட்டு சிங்கிளாக நடிக்கிறாரா விஜய்?