நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவல்துறையில் திடீரென கொடுக்கப்பட்டுள்ள புகார் ஒன்று கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவல்துறையில் திடீரென கொடுக்கப்பட்டுள்ள புகார் ஒன்று கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அத்தோடு 2டி நிறுவனம் பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்தும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதில், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரையும், லோகோவையும் பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் சில மோசடியான நபர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இருப்பதை அறிந்தோம். இந்த ஏமாற்று வேலை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். 2டி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் நடிகர்கள் தேர்வு நடப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல். எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை இது போன்ற ஆடிஷன் நடத்துவதில்லை. எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் இயக்குனர் டீமால் மட்டுமே, அவர்களுடைய அலுவலகத்தில் வைத்து தான் நட்சத்திர தேர்வுக்கான ஆடிடிஷன்கள் நடத்தப்படும்.
மேலும் அதற்காக நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை. எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. எனவே இத்தகைய போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களுடைய ரகசிய தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
