மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார். 

சுரேஷ் கோபிக்கு ராதிகா நாயகர் என்ற மனைவியும், 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது இளையமகன் சமீபத்தில் தான் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் தனது மகன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுரேஷ் கோபி அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பிரபல பாடகி பரவை முனியம்மாவின் கடைசி ஆசை... நிறைவேற்றப்படுமா இறுதி கோரிக்கை?

என் இளைய மகன் லண்டனில் இருந்து வந்துள்ளார். அவருடன் விமானத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரும் வந்திருக்கிறார். ஆனால் என் மகனுக்கு கொரோனா அறிகுறி இல்லை, இருந்தாலும் எனது குடும்ப மருத்துவரின் அறிவுரைக்கு இணங்க, அவரை கடந்த சில நாட்களாக தனி பிளாட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

மேலும் கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து கொண்டதால் நானும் எங்கும் செல்லாமல் தனியாக வீட்டில் இருக்கிறேன். பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.