actor sriman turn to begger character in new movie
தெலுங்கு திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் ஸ்ரீமன், தமிழில் 1994 ஆம் ஆண்டு "புதிய மன்னர்கள்" படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி, அஜித் நடித்த 'ராசி', விஜய் நடித்த 'லவ் டுடே' போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களால் கண்டுக்கொள்ளப்பட்ட நடிகராக மாறினார்.
இதுவரை, தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாகவும், குணசித்திர வேடத்திலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீமன் பிச்சைக்காரர் வேடத்தில், நடித்து வரும் புதிய படத்தின் சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்து ரசிகர்கள் செம ஷாக் ஆகி, "ஸ்ரீமன் உங்களுக்கு என்ன ஆனது, ஏன் இப்படி? ஏதாவது பாலா படத்தில் நடிக்கிறீர்களா...? என கேள்வி எழுப்பினர். ரசிகர் ஒருவர் கேட்ட இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள, ஸ்ரீமன் "இது பாலா படம் இல்லை என தெரிவித்துள்ளார்".
என்னினும் இந்த திரைப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் இவர் நடித்து வருவதால் இவருக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கூறப்படுகிரது.
