நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் செய்த ஒரு டுபாக்கூர் வேலை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியதால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்த சத்ய சாஹூ, இதே போல் நடிகர் ஸ்ரீகாந்த் விவகாரத்திலும் குழப்பம் இருந்த நிலையில் அவர் ஆசைப்பட்டதால் அவர் விரலுக்கு மை மட்டுமே வைக்கப்பட்டது. ஆனால் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

கைவசம் படங்கள் அவ்வளவாக இல்லாத நிலையில் ச்ச்சும்மா டைம் பாஸ் பண்ணிவரும் ஸ்ரீகாந்த், தேர்தல் தினத்தன்று, தனது ட்விட்டர் பக்கத்தில்...இன்று காலை சாலிகிராமம் காவேரி பள்ளியில் வாக்களித்தோம்’ என்று தனது மனைவியுடன் ஒற்றை விரலை உயர்த்தி போஸ் கொடுத்திருக்கிறார்.ஆதார் அட்டையில், முகவரி மாற்றம் செய்திருந்ததால்  ஏற்பட்ட குழப்பத்திற்கு இடையே, ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவுடன், மனைவியுடன் வந்து, ஸ்ரீகாந்த், ஓட்டு போட்டார் [?]. ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிகொண்டு அதிகாரிகள் வாக்களிக்க அனுமதித்ததாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் அவரது டுபாக்கூர் ட்விட்டர் செய்தியை அம்பலப்படுத்தும் விதமாக ...நடிகர் ஸ்ரீகாந்திற்கு மை மட்டுமே வைக்கப்பட்டது எனவும் அவர் ஓட்டு போடவில்லை எனவும் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.