நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பாடகர், நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்ட அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம்  'கனா'.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் எப்படி இந்தியன் கிரிக்கெட் டீமில் இடம்பிடிக்கிறார் என்பதை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார் அருண் ராஜாகாமராஜ். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகாத கதை காலத்தோடு...  பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திரைப்படமும் நன்றாக உள்ளதாக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நடிகரும், சிவகார்த்திகேயனுடன் பல படங்களில் நடித்துவரும், அவருடைய நண்பருமான...  சூரி, மிகவும் உருக்கமாக ஒரு ட்விட் போட்டுள்ளார்.

அதில், விவசாய வலியை உலகுக்கு உரக்க சொன்ன கனா படத்தில் அணில் அளவு பங்களிப்பையாவது பங்கு, சிவகார்த்திகேயன் பக்கத்தில் நின்று நான் செய்திருந்தால் எனக்கு பெரிய மன நிறைவாக இருந்திருக்கும்.  பட குழுவை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்! தமிழ் மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் #கனா. இந்த நிலையில் இந்த படத்தில் 'பங்கு' சிவகார்த்திகேயனுடன் தான் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தால் தனக்கு மனநிறைவை தந்திருக்கும் என்று நடிகர் சூரி கவலையோடு தெரிவித்துள்ளார்.